TNPSC Thervupettagam

தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கான சர்வதேச அங்கீகாரம்

May 21 , 2024 59 days 156 0
  • மே 01 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவியக் கூட்டணியானது (GANHRI) தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கான அங்கீகாரத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஒத்தி வைத்தது.
  • இந்தச் செயல்முறையானது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவியக் கூட்டணியினால் (GANHRI) நிர்வகிக்கப் படுகிறது.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆனது 1999 ஆம் ஆண்டு முதல் ‘A தர வரிசையினை’ கொண்டுள்ளது.
  • கடந்த ஆண்டு ஜெனீவாவில் அமைந்துள்ள அமைப்பிடமிருந்து மறு அங்கீகாரம் பெற இருந்தது.
  • GANHRI உலகளவில் 120 தேசிய மனித உரிமை நிறுவனங்களை ஒருங்கிணைக்கிறது.
  • 1993 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரீஸ் கோட்பாடுகளுக்கு இணங்க தேசிய மனித உரிமை ஆணையங்களை மதிப்பாய்வு செய்வதற்கும் அங்கீகாரம் வழங்குவதற்குமான பொறுப்பினை இந்த அமைப்பு கொண்டுள்ளது.
  • அங்கீகார வழங்கீட்டிற்கான துணைக் குழு (SCA) ஆனது, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா-பசிபிக் ஆகிய நாடுகளில் உள்ள ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் நான்கு என பதினாறு ‘A’ தரவரிசை கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையங்களைக் கொண்டுள்ளது.
  • இந்த முடிவு ஆனது மனித உரிமைகள் சபை மற்றும் சில ஐக்கிய நாடுகள் பொது சபை அமைப்புகளில் வாக்களிக்கும் இந்தியாவின் திறனைப் பாதிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்