TNPSC Thervupettagam

தேசிய மருத்துவ ஆணையம் - உலகளாவிய அங்கீகாரம்

September 27 , 2023 299 days 194 0
  • இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (NMC), உலக மருத்துவக் கல்விக் கூட்டமைப்பின் (WFME) அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
  • இந்த அந்தஸ்து 10 வருட காலத்திற்குச் செல்லுபடியாகும்.
  • இந்த அங்கீகாரமானது இந்திய மருத்துவப் பட்டதாரிகளுக்கு WFME அங்கீகாரம் தேவைப் படும் பிற நாடுகளில் முதுகலைப் பயிற்சி மற்றும் மருத்துவப் பயிற்சியைத் தொடர உதவும்.
  • தற்போதுள்ள அனைத்து 706 மருத்துவக் கல்லூரிகளும் WFME அங்கீகாரம் பெற்றதாகவும், அடுத்து வரும் 10 ஆண்டுகளில் அமைக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தானாகவே WFME அங்கீகாரம் பெற்றதாகவும் கொள்ளப்படும்.
  • உலக மருத்துவக் கல்விக் கூட்டமைப்பு (WFME) என்பது உலகளாவிய மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்