TNPSC Thervupettagam

தேசிய மருத்துவர்கள் தினம் - ஜூலை 1

July 3 , 2018 2278 days 560 0
  • சமுதாயத்திற்கு மருத்துவர்கள் அளிக்கும் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பினை பறைசாற்றுவதற்காகவும், நன்றியுணர்வினை வெளிப்படுத்துவதற்காகவும் இந்தியா முழுவதும் ஜூலை 1 அன்று தேசிய மருத்துவர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
  • சிறந்த மருத்துவர் மற்றும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சர் டாக்டர்.பிதான் சந்த்ரா ராய் அவர்களின் பிறந்த மற்றும் இறந்த ஆண்டு நிறைவினை இந்த தினம் ஒத்திருக்கிறது. இது டாக்டர்.ராய் அவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA-International Medical Association) 2018-கான கருத்துரு “மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் மீதான வன்முறைக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” என்பதே ஆகும்.
  • தேசிய மருத்துவர்கள் தினமானது ஜூலை 1 அன்று ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் என்று மத்திய அரசாங்கத்தால் 1991ல் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்