TNPSC Thervupettagam

தேசிய மருந்தியல் கல்வி தினம் - மார்ச் 06

March 14 , 2023 529 days 198 0
  • இந்திய மருந்தியல் சபையானது (PCI) இந்தத் தினத்தினை அறிவித்தது.
  • இந்தத் தினமானது பேராசிரியர் மகாதேவ லால் ஷ்ராஃப் அவர்களின் பிறந்த நாளின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் மருந்தியல் கல்வியை நிறுவச் செய்வதில் அவரதுப் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் இந்திய மருந்தியல் கல்வியின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்.
  • 1935 ஆம் ஆண்டில், இவர் ஐக்கிய மாகாண மருந்தியல் சங்கத்தினை நிறுவினார்.
  • இந்திய மருந்தியல் சபை என்பது இந்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது 1948 ஆம் ஆண்டு மருந்தியல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்