TNPSC Thervupettagam

தேசிய மாணவர் படை – இயக்குநர் ஜெனரல்

December 24 , 2017 2562 days 2321 0
  • தேசிய மாணவர் படையின் (National Cadet Corps) புதிய இயக்குநர் ஜெனரலாக லெப்டினன்ட் ஜெனரல் B.S. ஷரவத் பதவியேற்றுள்ளார்.
  • ஈராக் மற்றும் குவைத்தில் ஒரு வருடம் இந்தியாவின் இராணுவ பார்வையாளராக (Military Observer) பணியாற்றியுள்ள இவர், இது உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளும் பல்வேறு இராணுவபடைப் பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
  • இவர்க்கு 2008 ஆம் ஆண்டு, பீகாரின் கோசி நதி வெள்ளத்தின் போது சிறப்பாக செயல்பட்டமைக்காக சேனா பதக்கம் (SENA Award) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய மாணவர் படை
  • NCC (National Cadet Corps) என்று அழைக்கப்படும் தேசிய மாணவர் படை புது தில்லியை தலைமை இடமாக கொண்டு இயங்குகிறது.
  • இதன் தோற்றத்திற்கு 1948 ஆம் ஆண்டின் இந்திய தேசிய மாணவர் படைச் சட்டம் (National Cadet Corps Act of 1948) காரணமாக அமைந்தது. இது 1948 ஜூலை 15 இல் துவங்கப்பட்டது.
  • நாட்டிலுள்ள இளைஞர்களை ஒழுக்கம் மற்றும் தேசபக்தி கொண்ட குடிமக்களாக உருவாக்குவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முப்படை கழகம் தேசிய மாணவர் படை ஆகும்.
  • இந்தியாவில் உள்ள தேசிய மாணவர் படை தன்னார்வ அமைப்பு ஆகும். இது இந்தியா முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இருந்து மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறது.
  • குறிக்கோள் - ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் (Unity and Discipline)
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்