தேசிய மாணவர் படையின் (National Cadet Corps) புதிய இயக்குநர் ஜெனரலாக லெப்டினன்ட் ஜெனரல் B.S. ஷரவத் பதவியேற்றுள்ளார்.
ஈராக் மற்றும் குவைத்தில் ஒரு வருடம் இந்தியாவின் இராணுவ பார்வையாளராக (Military Observer) பணியாற்றியுள்ள இவர், இது உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளும் பல்வேறு இராணுவபடைப் பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
இவர்க்கு 2008 ஆம் ஆண்டு, பீகாரின் கோசி நதி வெள்ளத்தின் போது சிறப்பாக செயல்பட்டமைக்காக சேனா பதக்கம் (SENA Award) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய மாணவர் படை
NCC (National Cadet Corps) என்று அழைக்கப்படும் தேசிய மாணவர் படை புது தில்லியை தலைமை இடமாக கொண்டு இயங்குகிறது.
இதன் தோற்றத்திற்கு 1948 ஆம் ஆண்டின் இந்திய தேசிய மாணவர் படைச் சட்டம் (National Cadet Corps Act of 1948) காரணமாக அமைந்தது. இது 1948 ஜூலை 15 இல் துவங்கப்பட்டது.
நாட்டிலுள்ள இளைஞர்களை ஒழுக்கம் மற்றும் தேசபக்தி கொண்ட குடிமக்களாக உருவாக்குவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முப்படை கழகம் தேசிய மாணவர் படை ஆகும்.
இந்தியாவில் உள்ள தேசிய மாணவர் படை தன்னார்வ அமைப்பு ஆகும். இது இந்தியா முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இருந்து மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறது.
குறிக்கோள் - ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் (Unity and Discipline)