TNPSC Thervupettagam

தேசிய மாணாக்கர் படை (NCC) – 75வது ஆண்டுவிழா

December 1 , 2023 232 days 217 0
  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதியன்று, தேசிய மாணாக்கர் படை (NCC) அதன் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
  • இந்திய ஆயுதப் படைகளின் இளையோர் படைப் பிரிவாகச் செயல்படுகிற இதன் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
  • தேசிய மாணாக்கர் படை என்பது மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னார்வ இராணுவ மாணாக்கர் படையான இதில் பள்ளி மாணவர் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இதில் இணைய அனுமதி உண்டு.
  • 1917 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘பல்கலைக் கழகப் படையில்’ இருந்து தேசிய மாணாக்கர் படை உருவாக்கப்பட்டது.
  • 1920 ஆம் ஆண்டில், இந்தியப் பிராந்தியச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ‘பல்கலைக் கழகப் படை’க்குப் பதிலாக பல்கலைக்கழகப் பயிற்சிப் படை (UTC) உருவாக்கப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தேசிய மாணாக்கர் படை சட்டம் தலைமை ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1948 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று தேசிய மாணாக்கர் படை நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்