TNPSC Thervupettagam

தேசிய மிகை இலாபத் தடுப்பு அதிகாரி

November 30 , 2017 2580 days 954 0
  • தேசிய மிகை இலாபத் தடுப்பு அதிகாரியாக (NAA-National Anti-profiteering Authority) பத்ரி நரேன் சர்மாவை  நியமனங்களுக்கான  அமைச்சரவைக்  குழு (ACC-Appoinment Committee of Cabinet) நியமித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியினை நடைமுறைப்படுத்துவதில் ஒழுங்குமுறைகளை உறுதி செய்ய இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தப் பதவியானது இந்திய அரசு செயலாளருக்கு இணையான படிநிலையும், ஊதியமும் கொண்டுள்ளது.
  • 1985-ஆம் ஆண்டின் இராஜஸ்தான் பணிப்பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான பத்ரி நரேன் சர்மா, தற்சமயம் வருவாய் துறையின் கூடுதல் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
  • சரக்கு மற்றும் சேவை வரியின் அறிமுகத்திற்குப்பின் அதன் பலன்களும், விலைக் குறைப்புகளும் சரியாக நுகர்வோருக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
  • சரக்கு மற்றும் சேவை வரியின் மிகை இலாபத் தடுப்பு முறையின் கீழ்,
    • உள்ளூர் அளவிலான புகார்கள் மாநில குழுவிற்கும்
    • தேசிய அளவிலான புகார்கள் நிலைக் குழுவிற்கும்
       தெரிவிக்கப்பட்டு விசாரணை செய்யப்படும்.
  • சரக்கு மற்றும் சேவை வரியினால் ஏற்படும் வரிக்குறைப்பு மற்றும் பிற பலன்களை நுகர்வோருக்கு அளிக்காமல் தடுக்கும் எந்தவொரு வியாபார நிறுவனத்தின் பதிவையும் உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் இக்குழுவிற்கு உண்டு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்