TNPSC Thervupettagam

தேசிய மின்னணு சுகாதார ஆணையம்

April 20 , 2018 2414 days 779 0
  • முன்மொழியப்பட்ட சுகாதார சிகிச்சையில் டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு சட்டத்தினுடைய (Digital Information Security in Healthcare Act-DISHA) வரைவினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் (Union Ministry health and family welfare) இறுதி செய்துள்ளது.

  • சுதந்திர ஒழுங்குமுறைப்படுத்து அமைப்பாக (Independent Regulator) செயல்பட உள்ள தேசிய மின்னணு சுகாதார ஆணையத்தின் (National Electronic Health Authority - NeHA)  நிறுவுதலில் இது ஓர் முக்கியமான படியாகும்.
  • நாட்டில் டிஜிட்டல் சுகாதார சிகிச்சைத் தரவுகளின் பரிமாற்றம், இணைந்து செயலாற்றும் தன்மைக்கு வழிகாட்டுதல்கள் (guidelines)  மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் ஆகியவற்றை (Regulatory framework) உருவாக்குவதற்கான முதன்மை நிறுவனமே  தேசிய மின்னணு  சுகாதார ஆணையம் ஆகும்.
  • வரைவு நிலையில் உள்ள, சுகாதார சிகிச்சையில் டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு சட்டமானது மக்கள் தங்களினுடைய டிஜிட்டல் சுகாதாரத் தரவுகளுக்கு  பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் தனித்துவ அந்தரங்க பாதுகாப்பு உரிமை (Right to privacy, confidentiality and security)  ஆகியவற்றைப் பெறுவதற்கு   உதவும்.
  • தனிப்பட்ட அந்தரங்க மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை (Privacy and Security measures) நடைமுறைப்படுத்துதல், சுகாதாரம் தொடர்பான ஆவணங்களை பரிமாற்றம் செய்தல், சுகாதாரத் தகவல்களின் சேகரிப்பை  ஒழுங்கு முறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டில் மின்-சுகாதார தரநிலைகளின் (e-health standards) மேம்பாட்டில் முக்கிய செயல்பாத்திரத்தை இந்த ஆணையம் வகிக்கும்.
  • சுகாதாரத் தகவல் பரிமாற்ற அமைப்பை (Health Information Exchanges) அமைப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது.
  • மின்னணு சுகாதார ஆவணங்களின் (Electric health records-EHR) பரிமாற்றம், சேகரிப்பு, சேமிப்பு, தகவல் உற்பத்தி ஆகியவற்றிற்கு நெறிமுறைகள் (protocols), தரநிலைகள் (standards) மற்றும் செயல்பாட்டு வழிமுறைகள் (Operational guidelines) ஆகியவற்றை வகுப்பதற்கான அதிகாரத்தினை தேசிய மின்னணு  சுகாதார ஆணையம் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்