முன்மொழியப்பட்ட சுகாதார சிகிச்சையில் டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு சட்டத்தினுடைய (Digital Information Security in Healthcare Act-DISHA) வரைவினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் (Union Ministry health and family welfare) இறுதி செய்துள்ளது.
சுதந்திர ஒழுங்குமுறைப்படுத்து அமைப்பாக (Independent Regulator) செயல்பட உள்ள தேசிய மின்னணு சுகாதார ஆணையத்தின் (National Electronic Health Authority - NeHA) நிறுவுதலில் இது ஓர் முக்கியமான படியாகும்.
நாட்டில் டிஜிட்டல் சுகாதார சிகிச்சைத் தரவுகளின் பரிமாற்றம், இணைந்து செயலாற்றும் தன்மைக்கு வழிகாட்டுதல்கள் (guidelines) மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் ஆகியவற்றை (Regulatory framework) உருவாக்குவதற்கான முதன்மை நிறுவனமே தேசிய மின்னணு சுகாதார ஆணையம் ஆகும்.
வரைவு நிலையில் உள்ள, சுகாதார சிகிச்சையில் டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு சட்டமானது மக்கள் தங்களினுடைய டிஜிட்டல் சுகாதாரத் தரவுகளுக்கு பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் தனித்துவ அந்தரங்க பாதுகாப்பு உரிமை (Right to privacy, confidentiality and security) ஆகியவற்றைப் பெறுவதற்கு உதவும்.
தனிப்பட்ட அந்தரங்க மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை (Privacy and Security measures) நடைமுறைப்படுத்துதல், சுகாதாரம் தொடர்பான ஆவணங்களை பரிமாற்றம் செய்தல், சுகாதாரத் தகவல்களின் சேகரிப்பை ஒழுங்கு முறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டில் மின்-சுகாதார தரநிலைகளின் (e-health standards) மேம்பாட்டில் முக்கிய செயல்பாத்திரத்தை இந்த ஆணையம் வகிக்கும்.
சுகாதாரத் தகவல் பரிமாற்ற அமைப்பை (Health Information Exchanges) அமைப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது.
மின்னணு சுகாதார ஆவணங்களின் (Electric health records-EHR) பரிமாற்றம், சேகரிப்பு, சேமிப்பு, தகவல் உற்பத்தி ஆகியவற்றிற்கு நெறிமுறைகள் (protocols), தரநிலைகள் (standards) மற்றும் செயல்பாட்டு வழிமுறைகள் (Operational guidelines) ஆகியவற்றை வகுப்பதற்கான அதிகாரத்தினை தேசிய மின்னணு சுகாதார ஆணையம் கொண்டுள்ளது.