TNPSC Thervupettagam

தேசிய மீத்திறன் கணினித் திட்டம்

March 24 , 2020 1710 days 1375 0
  • தேசிய மீத்திறன் கணினித் திட்டமானது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான JN மையம் ஆகியவற்றில் மேலும் 3 மீத்திறன் கணினிகள் அமைக்கப்பட இருக்கின்றன.

இதுபற்றி

  • இந்தத் திட்டமானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், மேம்படுத்தப்பட்ட கணினியின் வளர்ச்சிக்கான மையம், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றினால் இணைந்து செயல்படுத்தப் படுகின்றது.
  • தற்பொழுது இந்தியா 5 மீத்திறன் கணினிகளைக் கொண்டுள்ளது. இந்தக் கணினிகள் உலகில் முன்னிலையில் உள்ள மீத்திறன் கணிகளைக் கொண்ட பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
  • இந்திய வெப்ப மண்டல வானிலையில் நிறுவனத்தில் உள்ள மீத்திறன் கணினியானது (பிரத்யூஷ்) உலகில் 39வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் இது வரை, “பரம் சிவா” ஆனது புவனேஷ்வர் IITயிலும் பரம் பிரம்மா ஆனது புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பரம் சக்தி கரக்பூரில் உள்ள IITயிலும் அமைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்