TNPSC Thervupettagam

தேசிய மீன் விவசாயிகள் தினம் – ஜூலை 10

July 12 , 2020 1538 days 639 0
  • இத்தினத்தை அனுசரிப்பதற்கான ஒரு முன்னெடுப்பானது மும்பையின் மத்திய மீன்வளக் கல்வி மையத்தினால் முதன்முதலில் எடுக்கப் பட்டதாகும்.
  • ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் மீனின் தூண்டப்பட்ட இனப்பெருக்கத்தின் முதலாவது வெற்றியானது (ஹைப்போபிசேஷன் முறை) டாக்டர் ஹீராலால் சௌத்ரி மற்றும் டாக்டர் K.H. அலிகுன்கி ஆகிய 2 விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக அடையப் பட்டது.
  • அதனையடுத்து இவர்கள் 3 முக்கியமான இந்திய மீன் வகைகளில் (கட்லா, ரோகு, மிரிகல் இன மீன்கள்) இந்தச் செயல்முறையை 1957 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி மேற்கொண்டனர்.
  • டாக்டர் H.L. சௌத்ரி மற்றும் டாக்டர் K.H. அலிகுன்கி ஆகியோரின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் ஜூலை 10 ஆம் தேதியானது இந்தியாவில் தேசிய மீன் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • உலகின் 2வது மிகப்பெரிய மீன்வளர்ப்பு உற்பத்தியாளர் (Aquaculture Producer) நாடு இந்தியா ஆகும்.
  • மேலும், உலகில் மூன்றாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளர் (Fish producing) நாடு இந்தியா ஆகும்.
  • இந்தத் தரவானது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் “GLOBEFISH” என்ற அமைப்பால் வெளியிடப்பட்டதாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்