TNPSC Thervupettagam

தேசிய முக்கியக் கனிமங்கள் திட்டம் 2025

January 31 , 2025 27 days 81 0
  • அரசாங்கம் ஆனது 16,300 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய முக்கியக் கனிமங்கள் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டத்திற்கு ஏழு ஆண்டுகளில் மொத்தம் 34,300 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது பசுமை ஆற்றலில் தன்னிறைவை அடைவதையும், பசுமை ஆற்றல் மாற்றத்தினை நோக்கிய இந்தியாவின் பயணத்தினை விரைவுபடுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
  • பொதுத்துறை நிறுவனங்கள் ஆனது இந்த திட்டத்திற்காக என்று 18,000 கோடி ரூபாய் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தாமிரம், லித்தியம், நிக்கல், கோபால்ட் மற்றும் அரிய மண் போன்ற முக்கியக்  கனிமங்கள் ஆனது, மிக வேகமாக வளர்ந்து வரும் தூய்மையான எரிசக்தித் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியைத் தூண்டுவதற்குத் தேவையான மிகவும் அத்தியாவசிய மூலப்பொருட்கள் ஆகும்.
  • இது வரை 24 முக்கியக் கனிமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • NCMM ஆனது, கனிம ஆய்வு, சுரங்கம், அதிலிருந்து பிற பலன் தரும் பொருட்களை எடுத்தல், செயலாக்கம் மற்றும் இறுதி விளைப் பொருட்களிலிருந்து பிற பொருட்களை எடுத்தல் உள்ளிட்ட மதிப்புச் சங்கிலியின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கும்.
  • நாட்டிற்குள்ளும், நாட்டின் கடல் பகுதிகளிலும் முக்கியக் கனிமங்களின் ஆய்வினை இந்தத் திட்டம் தீவிரப்படுத்தும்.
  • இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) ஆனது, கடந்த மூன்று ஆண்டுகளில் முக்கியக் கனிமங்களுக்கான 368 ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
  • தற்போது 2024-25 ஆம் ஆண்டில் 195 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • 2025-26 ஆம் ஆண்டில், பல்வேறு முக்கியக் கனிமங்களுக்கான 227 திட்டங்களை GSI மேற்கொள்ள உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்