ஆசிய வளர்ச்சி வங்கியானது தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் (National Investment and Infrastructure Fund – NIIF) 100 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
NIIF நிதியானது 2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
இந்த நிதியின் முக்கிய நோக்கம் நாட்டில் புதிதாக ஏற்படுத்தப்பட இருக்கும் பசுமைவழித் திட்டங்கள் மற்றும் நடைமுறையில் ஏற்கனவே உள்ள (பழுப்புவழி) திட்டங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு நிதியுதவி அளித்தலாகும்.
NIIF ஆனது இந்த நிதியைப் போக்குவரத்து, ஆற்றல், நீர், வீட்டு வசதி, நீர் மேலாண்மை ஆகியவற்றில் முதலீடு செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது.
NIIFன் கீழ் முக்கியமான 3 நிதிகள் உள்ளன.
மாஸ்டர் நிதி, நிதிகளின் நிதி மற்றும் உத்திசார் முதலீட்டு நிதி ஆகியவை இதில் அடங்கும்.