இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 11-ம் தேதி தேசிய யுனானி தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
ஒரு தலைசிறந்த இந்திய யுனானி மருத்துவராக அவர் அளித்த பங்களிப்புகளுக்கு ஒரு அங்கீகாரமாக ஹாகிம் அஜ்மல் கானின் பிறந்த தினமான பிப்ரவரி 11-ம் தேதி, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் (Ministry of AYUSH) யுனானி தினமாக 2016 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் யுனானி தினத்தை நினைவில் வைத்திட பொது சுகாதாரத்திற்கான யுனானி மருத்துவத்தின் மீது தேசிய மாநாடு என்ற இரண்டு நாள் அமர்வு புதுதில்லியில் நடத்தப்பட்டது.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் யுனானி மருத்துவத்திற்கான ஆயுஷ் விருதுகள் என்ற திட்டத்தையும் ஏற்படுத்தியது. இத்திட்டம் ஒவ்வொரு வருடத்திலும் 12 விருதுகளை பின்வரும் பிரிவுகளில் அளித்திடுவதற்கான விதிகளைக் கொண்டிருக்கின்றது.