ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி, மிகச் சிறந்த யுனானி ஆய்வாளரான ஹக்கிம் அஜ்மல்கானின் பிறந்த தினத்தை குறிப்பிடும் வகையில் தேசிய யுனானி தினம் கொண்டாடப்படுகின்றது.
சிறந்த கல்வியாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஹக்கிம் அஜ்மல் கான் சிறந்த இந்திய யுனானி மருத்துவரும், யுனானி மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சிக்கான அடித்தளமிட்டவரும் ஆவார்.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள யுனானி மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி மையம், தேசிய யுனானி தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச யுனானி மருத்துவத்திற்கான மாநாடு என்று இரண்டு நாள் கருத்தரங்கை நடத்துகின்றது.
இந்த மாநாட்டின் கருத்துரு - பிரதான சுகாதார முறையுடன் யுனானி மருத்துவ முறையை ஒருங்கிணைத்தல்.