பெருமைமிகு தேசிய வடிவமைப்பு விருதானது பாதுகாப்பு மந்திரிக்கு அறிவியல் ஆலோசகராகவும், ஏவுகணைகள் மற்றும் யுக்திசார்ந்த ஆயுதங்களுக்கான இயக்குநர் ஜெனரலாகவும் உள்ள ஜி. சதீஷ் ரெட்டிக்கு வழங்கப்பட்டது.
சதீஷ் ரெட்டி நேவிகேஷன் (வழி செலுத்துதல்) துறையில் மிகுந்த நிபுணராக அறியப்படுகிறார். மேலும் இங்கிலாந்தின் லண்டன் மற்றும் வானூர்தி சங்கமான இராயல் நேவிகேஷன் நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியர் என்ற பெருமையையும் கொண்டுள்ளார்.
இந்தியாவில் வானூர்தி தொழில் நுட்பங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மேம்பாட்டிற்கு நீடித்த முயற்சிகள் எடுத்தமைக்காகவும், தனது முக்கிய தேசிய பங்களிப்புகள் மூலம் உள்நாட்டு வடிவமைப்பு, பலதரப்பு ஏவுகணை மேம்பாடுகள், கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மின்னணுவியல் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முயற்சிகள் எடுத்தமைக்காகவும் இந்த விருதினை அவர் பெறுகிறார்.
சதீஷ் ரெட்டி, பல்வேறு வகையான தந்திரமான மற்றும் யுக்திவாய்ந்த ஏவுகணைகளை வடிவமைத்து மேம்படுத்தும் “இந்தியாவின் ஏவுகணைகள் மையமான” டாக்டர். A.P.J. அப்துலகலாம் ஏவுகணை வளாகத்தின் தலைவராக உள்ளார்.