நாட்டின் காடுகள், வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை கௌரவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இது 1730 ஆம் ஆண்டு நிகழ்ந்த கெஜர்லி படுகொலையின் நினைவாக நிறுவப் பட்டது.
இந்த நிகழ்வின் போது, அம்ரித தேவி பிஷ்னோய் மற்றும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட நபர்கள் கெஜ்ரி மரங்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தனர்.
மஹாராஜா அபய் சிங், தன்னுடைய அரண்மனையினைக் கட்டுவதற்காக மரங்களை வெட்டுமாறு வழங்கிய கட்டளையை எதிர்த்து அவர்கள் போராடினர்.