இது முதன்மையாக காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்களுக்குக் கௌரவமளிக்கிறது.
எனினும், இந்தத் தினத்தின் வரலாற்றுப் பின்புலம் 1730 ஆம் ஆண்டில் நடைபெற்ற கெஜர்லி படுகொலையுடன் தொடர்புடையது.
1730 ஆம் ஆண்டில், வரலாற்றுப் புகழ்மிக்க கெஜர்லி படுகொலை என்பது மார்வார் பேரரசிற்குள் நடைபெற்றது.
ராஜஸ்தானின் மகாராஜா அபாய் சிங், தனது புத்தம்புதிய அரண்மனைக்கு வேண்டி மரக்கட்டைகளைக் கொண்டு செல்வதற்காக கெஜர்லியின் பிஷ்னோய் கிராமத்தில் உள்ள மரங்களை வெட்ட உத்தரவிட்டார்.
பிஷ்னோய் சமூகத்தினர் இந்தச் செயலைக் கடுமையாக எதிர்த்ததோடு, காடுகளைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருந்தனர்.