TNPSC Thervupettagam

தேசிய வனத் தியாகிகள் தினம் – செப்டம்பர் 11

September 18 , 2020 1443 days 662 0
  • இது நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் காடுகள் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாப்பதற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1730 ஆம் ஆண்டு செப்டம்பர்  11 அன்று நிகழ்ந்த கெஜ்ரலி படுகொலையை நினைவுபடுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தப் படுகொலையின் போது, ராஜஸ்தானின் மகாராஜாவான அடல் சிங் அவர்கள் இராஜஸ்தானின் கெஜ்ரலி கிராமத்தில் இருக்கும் பிஷ்னோய் சமூகத்தின் புனித மரமாகக் கருதப்படும் கெஜ்ரலி மரங்களை வெட்டத் தொடங்கினார்.
  • அமிர்தா தேவி என்று பெயர் கொண்ட பெண்மணி இதனைத் தடுத்து, இந்த மரங்களுக்குப் பதிலாக தனது தலையை வெட்டிக் கொள்ளுமாறு கூறினார்.
  • அபய் சிங்கின் படையினர் இதனைத் தடுத்த அமிர்தா தேவி மற்றும் அவரது 3 மகள்களின் தலையைத் துண்டித்தனர். மேலும் அச்சமூகத்திலிருந்து 359 நபர்களும் கொல்லப் பட்டுள்ளனர்.
  • மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமானது இத்தினத்தை அனுசரிப்பதற்காக வேண்டி 2013 ஆம் ஆண்டில் பிரகடனம் ஒன்றை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்