இந்தியாவில் வனவிலங்குப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த வார அளவிலான அனுசரிப்பு மேற்கொள்ளப் படுகிறது.
இந்திய வனவிலங்கு வாரியமானது, 1952 ஆம் ஆண்டில் இந்த கருத்தாக்கத்தை முதன் முதலில் உருவாக்கியது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்த அனுசரிப்பிற்கான கருத்துரு, “வனவிலங்குப் பாதுகாப்பிற்கான கூட்டாண்மை” என்பதாகும்.
இது 1957 ஆம் ஆண்டில் ஒரு வார கால அளவிலான கொண்டாட்டமாக உருவானது.