1860 ஆம் ஆண்டில் சர் ஜேம்ஸ் வில்சன் வருமான வரியை நிறுவியதனை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த முதல் வரியானது வருமான வரிச் சட்டத்தின் 2(24) பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரும் வருமானத்திற்கு வரி விதிப்பதனை முதன்மை நோக்கமாகக் கொண்டது.
ஆனால் நாட்டின் வரி விதிப்பு முறையில், 1922 ஆம் ஆண்டின் விரிவான வருமான வரிச் சட்டத்தினால் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
1924 ஆம் ஆண்டில், மத்திய வருவாய் வாரியச் சட்டம் ஆனது, வாரியத்தினை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அமைப்பதன் மூலம் இந்தக் கட்டமைப்பை மேலும் நன்கு வலுப்படுத்தியது.
குரூப் A அதிகாரிகள் 1946 ஆம் ஆண்டில் இந்தப் பணிப் பிரிவில் பணியமர்த்தப் பட்ட நிலையில், அவர்களுக்கு மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஆரம்பக் கட்டப் பயிற்சி வழங்கப் பட்டது.