தேசிய வர்த்தக ஊக்குவிப்புத் திட்டம் (National Trade Facilitation Action Plan, NTFAP)
July 24 , 2017 2680 days 1080 0
இந்தியாவின் NTFAP ஆனது ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளுக்கான சரக்கு வெளியீட்டு நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேசச் சுங்க அமைப்பானது (World Customs Organisation), தேசிய வர்த்தக ஊக்குவிப்புத் திட்டத்தை மற்றநாடுகள் பின்பற்றுவதற்கு ஏற்ற ஒரு சிறந்த செயல்முறை என்றும், இது உலக வணிக அமைப்பின் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தத்தின்(Trade Facilitation Agreement - TFA)தேவைகளை விட அதிகமாக இருக்கிறது என குறிப்பிடுகிறது.
தேசிய வர்த்தக ஊக்குவிப்புத் திட்டமானது 2017 முதல் 2020 ஆம் ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.
உலகவங்கியின் "சுலபமாக வியாபாரம் செய்வதற்கான வருடாந்திர அறிக்கையில்" (World Banks Ease of doing business report) தனது தரத்தை உயர்த்துவதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.
உலகெங்கிலும் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தத்தை (TFA) சீரான முறையில் செயல்படுத்த சர்வதேசச் சுங்க அமைப்பு உதவுகிறது. உதவிகள் ஒப்பந்தத்தின் சீரான செயல்பாட்டை ஆதரிக்கும் சர்வதேசஅமைப்பு, உலக சுங்க அமைப்பு ஆகும்.
வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தம் (TFA)
உலக வர்த்தக அமைப்பின், ஒப்பந்தமானது சுங்க நெறிமுறைகளை தளர்த்தி, எல்லைகளுக்கு இடையில் வேகமாக சரக்குகளைப் பரிமாற முயற்சிமேற்கொள்கிறது. 2016 ஆம்ஆண்டு இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வர்த்தக உதவிகள் ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைமுறைக்கு வந்தது.
வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தம் (TFA), முழுமையாக செயல்முறைப்படுத்தப்பட்டால் உலகவர்த்தகம் 1 டிரில்லியன் டாலர்கள் வரை கூடுதலாக உயரக் கூடும்.
வர்த்தக உதவிகள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை செயலாளர் தலைமையிலான, வர்த்தக எளிமையாக்களுக்கான தேசிய குழு (NCTF), ஒன்று உருவாக்கப்பட்டது