TNPSC Thervupettagam

தேசிய வர்த்தக ஊக்குவிப்புத் திட்டம் (National Trade Facilitation Action Plan, NTFAP)

July 24 , 2017 2534 days 980 0
  • இந்தியாவின் NTFAP ஆனது ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளுக்கான சரக்கு வெளியீட்டு நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேசச் சுங்க அமைப்பானது (World Customs Organisation), தேசிய வர்த்தக ஊக்குவிப்புத் திட்டத்தை மற்றநாடுகள் பின்பற்றுவதற்கு ஏற்ற ஒரு சிறந்த செயல்முறை என்றும், இது உலக வணிக அமைப்பின் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தத்தின்(Trade Facilitation Agreement - TFA)தேவைகளை விட அதிகமாக இருக்கிறது என குறிப்பிடுகிறது.
  • தேசிய வர்த்தக ஊக்குவிப்புத் திட்டமானது 2017 முதல் 2020 ஆம் ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • உலகவங்கியின் "சுலபமாக வியாபாரம் செய்வதற்கான வருடாந்திர அறிக்கையில்" (World Banks Ease of doing business report) தனது தரத்தை உயர்த்துவதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.
  • உலகெங்கிலும் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தத்தை (TFA) சீரான முறையில் செயல்படுத்த சர்வதேசச் சுங்க அமைப்பு உதவுகிறது. உதவிகள் ஒப்பந்தத்தின் சீரான செயல்பாட்டை ஆதரிக்கும் சர்வதேசஅமைப்பு, உலக சுங்க அமைப்பு ஆகும்.
  • வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தம் (TFA)
  • உலக வர்த்தக அமைப்பின், ஒப்பந்தமானது சுங்க நெறிமுறைகளை தளர்த்தி, எல்லைகளுக்கு இடையில் வேகமாக சரக்குகளைப் பரிமாற முயற்சிமேற்கொள்கிறது. 2016 ஆம்ஆண்டு இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • வர்த்தக உதவிகள் ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைமுறைக்கு வந்தது.
  • வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தம் (TFA), முழுமையாக செயல்முறைப்படுத்தப்பட்டால் உலகவர்த்தகம் 1 டிரில்லியன் டாலர்கள் வரை கூடுதலாக உயரக் கூடும்.
  • வர்த்தக உதவிகள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை செயலாளர் தலைமையிலான, வர்த்தக எளிமையாக்களுக்கான தேசிய குழு (NCTF), ஒன்று உருவாக்கப்பட்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்