இத்தினமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India - ECI) நிறுவன நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகின்றது.
இது அரசியலமைப்பின் 324வது சரத்து மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து அதிகாரத்தைப் பெறும் ஒரு அரசியலமைப்புச் சார்ந்த அமைப்பாகும்.
தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம் இளைஞர்களுக்கு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
இத்தின அனுசரிப்பானது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டின் தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள் ‘ஒரு வலுவான ஜனநாயகத்திற்கான தேர்தல் அறிவு’ என்பதாகும்.