தேர்தல் செயல்பாடுகளில் குடிமக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதற்காக 2019 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி 9வது தேசிய வாக்காளர்கள் தினத்தை இந்தியா அனுசரித்தது.
இந்த ஆண்டிற்கான தேசிய வாக்காளர்கள் தினத்தின் கருத்துருவானது, "எந்தவொரு வாக்களாரும் விடுபட்டுவிடாமல் அனைவரையும் உள்ளடக்கிய" என்பதாகும்.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதை நினைவு கூர்வதற்காக 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நாடெங்கிலும் தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.