இணையம் ஆதிக்கம் செலுத்தும் சகாப்தத்திலும் புத்தகங்களைப் படிப்பதன் மதிப்பை மக்களுக்கு நினைவூட்டுவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தினமானது கேரளாவில் ‘நூலக இயக்கத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் P.N. பனிக்கரின் நினைவு நாளைக் குறிக்கிறது.
இவர் கேரளாவில் நூலக இயக்கத்தின் மையமாக இருந்த சனாதன தர்ம நூலகத்தை நிறுவினார்.
வாசிப்பின் தந்தை என்றழைக்கப்பட்ட இவர் 1995 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று காலமானார்.
கேரளாவின் கல்வி அமைச்சகமானது அவரது நினைவு நாளில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் வயனா வாரம் எனப்படும் வாசிப்பு வாரத்தைக் கடைபிடிக்கிறது.