சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று (டிசம்பர் 3) புதுதில்லியில் மாற்றுத் திறனாளிகளின் சிறந்தப் பணிகளுக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருதுகளை வழங்கினார்.
தமிழகத்தைச் சோ்ந்த ஏ.எம்.வேங்கடகிருஷ்ணன், எஸ்.ஏழுமலை, கே.தினேஷ், மானேக்ஷா தண்டபாணி, கே.ஜோதி, டி.பிரபாகரன் ஆகியோருக்கு இந்த தேசிய விருது வழங்கப் பட்டது.