TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு அருங்காட்சியகம்

August 24 , 2017 2682 days 1163 0
  • மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நாட்டிலேயே முதன்முறையாக தேசிய விளையாட்டு அருங்காட்சியகத்தை டெல்லியில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் துவங்க இருக்கிறது.
  • இந்த அருங்காட்சியகம் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டுவதோடு இந்தியாவின் பழமையான விளையாட்டுகள் மீதும் கவனம் செலுத்தும்.
  • இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கம் விளையாட்டு என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் என்று பிரபலப்படுத்துவது ஆகும்.
  • தற்போதைக்கு, இந்த அருங்காட்சியகம் பழமையான நடைமுறையான தொகுப்புகளை நினைவுபடுத்துமிடமாக மட்டுமல்லாமல், அனைத்துத் தலைமுறையும் கலந்துரையாடும் ஒரு மையமாகத் திகழும்.
  • இது விளையாட்டுத் துறையில் இந்திய ஜாம்பவான்களின் சாதனைகளைக் காட்சிப்படுத்துவதோடு கல்விக்கான மையமாகவும், இளைஞர்கள் விளையாட்டு நடவடிக்கைகளை ஆய்ந்தறிய வாய்ப்பு வழங்கும் நிறுவனமாகத் திகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்