TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு பல்கலைக் கழக மசோதா, 2018

August 5 , 2018 2309 days 712 0
  • இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகத்தை மணிப்பூரின் மேற்கு இம்பாலில் நிறுவுவதற்காக, தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழக மசோதா, 2018 என்ற மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • இப்பல்கலைக்கழகம், விளையாட்டு அறிவியல், விளையாட்டுத் தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை மற்றும் விளையாட்டுப் பயிற்சி ஆகிய துறைகளில் விளையாட்டுக் கல்வியினை மேம்படுத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
  • இம்மசோதா தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க, ஏற்கனவே 2018ம் ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழக அவசரநிலைச் சட்டம் 2018 என்பதை பதிலீடு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்