இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகத்தை மணிப்பூரின் மேற்கு இம்பாலில் நிறுவுவதற்காக, தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழக மசோதா, 2018 என்ற மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை நிறைவேற்றியுள்ளது.
இப்பல்கலைக்கழகம், விளையாட்டு அறிவியல், விளையாட்டுத் தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை மற்றும் விளையாட்டுப் பயிற்சி ஆகிய துறைகளில் விளையாட்டுக் கல்வியினை மேம்படுத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
இம்மசோதா தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க, ஏற்கனவே 2018ம் ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழக அவசரநிலைச் சட்டம் 2018 என்பதை பதிலீடு செய்கிறது.