TNPSC Thervupettagam
November 19 , 2022 611 days 381 0
  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்த விருதுகளை அறிவித்துள்ளது.
  • மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என்ற விருதானது, சென்னையைச் சேர்ந்த மேசைப் பந்தாட்ட வீரரான அச்சாந்தா சரத் கமல் என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • இது நாட்டின் விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாகும்.
  • இது கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரு பிரமிக்கத்தக்க மற்றும் மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரருக்கு வழங்கப்படுகின்றது.
  • அர்ஜீனா விருது என்பது கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மிகத் திறமையான விளையாட்டினை வெளிப்படுத்தியமைக்காக வழங்கப்படுகின்றது.
  • தமிழ்நாட்டினைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் R.பிரக்ஞானானந்தா மற்றும் துப்பாக்கிச் சுடும் வீரரான இளவேனில் வாலறிவன் ஆகியோருக்கு அர்ஜீனா விருதுகள் வழங்கப் பட்டன.
  • துரோணாச்சாரியா விருது ஒரு தொடர்ச்சியான அடிப்படையில் திறமையான மற்றும் தகுதி மிக்கப் பயிற்சியாளர்களுக்காக வழங்கப்படுகின்றது.
  • தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதானது, தங்களது திறமையின் மூலம் விளையாட்டிற்கு மிகுந்த அளவில் பங்களிப்பினைச் செய்த விளையாட்டு வீரர்களை கௌரவிக்க வழங்கப் படுகின்றது.
  • ராஷ்ட்ரிய கேல் ரத்னா புரஸ்கார் என்பது தேசிய மற்றும் மாநில அளவில் இருக்கும் விளையாட்டு அமைப்புகள் உள்பட பெருநிறுவன அமைப்புகள், விளையாட்டுக் கட்டுப்பாட்டு மன்றங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப் படுகின்றது.
  • மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை என்பது பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் ஒட்டு மொத்தத் திறமையில் முன்னணியில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்