TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு விருதுகள் 2023

December 26 , 2023 205 days 743 0
  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆனது, 2023 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்துள்ளது.
  • இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் 2023 ஆம் ஆண்டின் வில்வித்தைப் போட்டியின் திருப்புமுனை நாயகி அதிதி கோபிசந்த் சுவாமி உட்பட 26 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளதாக உறுதி செய்யப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது: சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி (பேட்மிண்டன்).
  • வழக்கமான பிரிவில் ஐந்து பயிற்சியாளர்கள் மற்றும் வாழ்நாள் பிரிவில் மூன்று பயிற்சியாளர்கள் துரோணாச்சார்யா விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது (வழக்கமான பிரிவு): லலித் குமார் (மல்யுத்தம்), R.B. ரமேஷ் (சதுரங்கம்), மஹாவீர் பிரசாத் சைனி (மாற்றுத் திறனாளிகளுக்கானத் தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லர் கம்பம்).
  • சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனையாளர் பிரிவு): ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்), பாஸ்கரன். E (கபடி), ஜெயந்த குமார் புஷிலால் (மேசை பந்தாட்டம்).
  • வாழ்நாள் சாதனைக்கான தியான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்