TNPSC Thervupettagam
January 4 , 2025 7 days 102 0
  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது 2024 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்துள்ளது.
  • மனு பாக்கர், D.குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதினைப் பெற்றுள்ளனர்.
  • விளையாட்டு அமைச்சகம் ஆனது, 17 மாற்றுத் திறனாளித் தடகள வீரர்கள் உட்பட 32 விளையாட்டு வீரர்களின் பெயர்களை அர்ஜுனா விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
  • முன்னாள் சைக்கிள் பந்தய வீரர் சுச்சா சிங் மற்றும் முன்னாள் மாற்றுத் திறனாளி-நீச்சல் வீரர் முரளிகாந்த் ராஜாராம் பெட்கர் ஆகியோருக்கு விளையாட்டு மற்றும் போட்டிகளில் மிகவும் சிறப்பானப் பங்களிப்பினை ஆற்றியதற்காக என்று அர்ஜுனா விருதுகள் (வாழ்நாள்) வழங்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனைகளான துளசிமதி, நித்ய ஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோர் அர்ஜுனா விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர் அபய் சிங்கும் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • சுபாஷ் ராணா (மாற்றுத் திறனாளி வீரர் - துப்பாக்கிச் சுடுதல் வீரர்), தீபாலி தேஷ்பாண்டே (துப்பாக்கி சுடுதல்) மற்றும் சந்தீப் சங்வான் (ஹாக்கி) ஆகியோர் 2024 ஆம் ஆண்டு துரோணாச்சார்யா விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • வாழ்நாள் சாதனை என்ற பிரிவில் S.முரளிதரன் (பேட்மிண்டன்) மற்றும் அர்மாண்டோ அக்னெலோ கோலாகோ (கால்பந்து) ஆகியோருக்கும் துரோணாச்சார்யா விருது வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்