மனு பாக்கர், D.குகேஷ், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் தங்கள் கேல் ரத்னா விருதுகளைப் பெற்றனர்.
மேலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் 32 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
அர்ஜுனா விருதைப் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சரப் ஜோத் சிங் மற்றும் ஸ்வப்னில் குசலே ஆகியோரும் அடங்குவர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் முரளிகாந்த் இராஜாராம் பெட்கரருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சண்டிகர் பல்கலைக் கழகம், லவ்லி புரொஃபஷனல் பல்கலைக் கழகம் மற்றும் குரு நானக் தேவ் பல்கலைக் கழகத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை வழங்கப் பட்டது.
80 வயதான போர் வீரரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான முரளிகாந்த் பெட்கர், வாழ்நாள் சாதனையாளருக்கு ஆன அர்ஜுனா விருதைப் பெற்றார்.
விளையாட்டுகளை நன்கு ஊக்குவிப்பதற்காக இந்திய உடற்கல்வி அறக்கட்டளைக்கு இராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார் வழங்கப்பட்டது.
தீபாலி தேஷ்பாண்டே (துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர்) மற்றும் அர்மாண்டோ அக்னெலோ கோலாகோ (கால்பந்து) ஆகியோர் துரோணாச்சார்யா என்ற விருதைப் பெற்றனர்.