TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டுகளுக்கானப் புதிய சின்னம்

February 6 , 2020 1627 days 655 0
  • 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக சுடர் தொண்டை கொண்ட புல்புல் வகை பறவையானது (ஒரு வகை குருவி இனம்) தேர்வு செய்யப் பட்டுள்ளது.
  • தேசிய விளையாட்டுப் போட்டியின் 36வது பதிப்பினை கோவா மாநிலம் நடத்த இருக்கின்றது.
  • சுடர் தொண்டை கொண்ட புல்புல் வகை உயிரினமானது (பைக்னோநோட்டஸ் குலாரிஸ்) குருவி இனத்தைச் சேர்ந்த புல்புல் வகை குடும்பத்தில் உள்ள ஒரு பறவையாகும்.
  • இவை ரூபிகுலா என்றும் அழைக்கப் படுகின்றன. மேலும் இது கோவாவின் மாநிலப் பறவையாகவும் விளங்குகின்றது.
  • இது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள  காடுகளில் மட்டுமே காணப் படுகின்றது.
  • இந்தப் பறவையானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்பு நிறப் பட்டியலில் “தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இது வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் அட்டவணை IVல் பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்