TNPSC Thervupettagam

தேசிய விவசாயிகள் தினம் (கிசான் திவாஸ்) - டிசம்பர் 23

December 31 , 2020 1338 days 452 0
  • முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • இவர் 1902 ஆம் ஆண்டில் மீரட்டில் பிறந்தார்.
  • இவர் 1979 ஆம் ஆண்டு ஜூலை 28 முதல் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14 வரை இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக இருந்தார்.
  • "உண்மையான இந்தியா அதன் கிராமங்களில் வாழ்கிறது" என்று அவர் ஒரு தடவை கூறினார்.
  • 1952 ஆம் ஆண்டில், இந்திய விவசாயத் துறை அமைச்சராக இருந்த சரண் சிங் இந்தியாவில் ஜமீன்தாரி முறையை ஒழிக்க கடுமையாக உழைத்தார்.
  • 1953 ஆம் ஆண்டில், இவர் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை நிறைவேற்றச் செய்தார்.
  • 2001 ஆம் ஆண்டில், சரண் சிங்கின் பிறந்த நாளை கிசான் திவாஸ் என்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்