முன்னாள் இந்திய பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிச. 23ம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவா் முன்னாள் பிரதமா் சரண் சிங்.
1979-ம் ஆண்டு ஜூலை மாதம், நாட்டின் 5-வது பிரதமராக பதவியேற்றார், சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார்.
அதேசமயம் நிலச் உரிமையாளர்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.
அவருடைய ஆட்சியின்போது தான் விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார்.