TNPSC Thervupettagam

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி தினம் – ஜூலை 12

July 13 , 2023 503 days 196 0
  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) ஆனது இந்த ஆண்டு தனது 42வது ஸ்தாபன  தினத்தைக் கொண்டாடியது.
  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி என்பது 1981 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுச் சட்டம் என்ற ஒரு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது, நிதி, மேம்பாடு மற்றும் மேற்பார்வைச் செயல்பாடுகளின் அடிப்படையில் கிராமப் பொருளாதாரத்தின் கிட்டத் தட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
  • கிசான் கடன் அட்டை (KCC) திட்டமானது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.
  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது 1992 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழு-வங்கி இணைப்புத் திட்டத்தை (SHG-BLP) அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்