தேசிய அளவில் புதிய தொழில்கள் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் ஆணையத்தின் கட்டமைப்பு குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தலைமை தாங்க உள்ளார்.
பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துதல், அறிவுசார் சொத்துரிமைகளை உருவாக்குதல், அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் வணிகமயமாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த ஆணையமானது பொதுத் துறை அமைப்புகளுக்கு உதவ உள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள எளிதில் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் ஒட்டு மொத்தத் தர வரிசையில் 63வது இடத்தில் உள்ள இந்திய நாடானது அப்பட்டியலில் உள்ள ஒரு தொழிலைத் தொடங்குதல் எனும் பிரிவில் 136வது இடத்தில் உள்ளது.