TNPSC Thervupettagam

தேசியக் கணிதவியல் தினம் – டிசம்பர் 22

December 26 , 2020 1343 days 506 0
  • இது 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் அவர்களால் மதராஸ் பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டது.
  • இது ஸ்ரீனிவாச இராமானுஜரின் 125வது பிறந்த தின நினைவைக் குறிப்பதற்காக அனுசரிக்கப் பட்டது.
  • மேலும் 2012 ஆம் ஆண்டானது தேசியக் கணிதவியல் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது.
  • 1887 ஆம் ஆண்டில் இத்தினத்தில் இராமானுஜன் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்தார்.
  • இவரது சுயசரிதையான ”முடிவுறாத எண்ணை அறிந்த மனிதர்” (The man who knew infinity) என்ற திரைப்படமானது 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • 1918 ஆம் ஆண்டில் இவர் நீள்வட்டச் செயல்பாடுகள் மற்றும் எண் கோட்பாடுகள் குறித்த இவரது ஆய்விற்காக ராயல் சமூகத்தின் தோழமைப் பிரதிநிதி என்ற ஒரு தகுதி நிலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1918 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  உள்ள டிரினிட்டி கல்லூரியின் தோழமைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது இந்தியர் இவராவார்.
  • இராமானுஜன் கடினமான முக்கோணவியல் கணக்குகளைத் தீர்ப்பதற்கான  கோட்பாடுகளைக் கண்டறிந்தார்.
  • சாஸ்த்ரா இராமானுஜர் பரிசானது இராமானுஜரின் விருப்பத் துறையில் தலைசிறந்த பங்களிப்புகளை வழங்கிய இளம் கணிதவியலாளருக்கு (32 வயதுக்குக் கீழ்) ஒவ்வொரு ஆண்டும் வழங்கப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டு சாஸ்த்ரா இராமானுஜன் பரிசானது அமெரிக்காவின் பிரின்ஸ்டேன் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் ஹீப்ரு ஜெருசலம் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச்  சேர்ந்த ஷாய் எவ்ரா என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்