கலாச்சார அமைச்சகம் ஆனது, தேசியக் கலாச்சார வரைபடமாக்கல் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரங்களை மீளுருவாக்கம் செய்து அதைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான அதன் ஒரு ஆக்கப் பூர்வமான திறன் ஆகியவற்றினை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துவதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 6.5 லட்சம் கிராமங்களின் கலாச்சார அம்சங்களை வரைபடமாக்கி (பதிவு செய்து), கலைஞர்கள் மற்றும் கலை நடைமுறைகளின் தேசிய பதிவேட்டை உருவாக்குகிறது.
இதன் மாவட்ட வாரியான விவரங்கள் ஆனது, மேரா காவ்ன் மேரி தரோஹர் (MGMD) இணையதளத்தில் கிடைக்கப் பெறும்.
தற்போது சுமார் 4.5 லட்சம் கிராமங்களின் தரவுகள் ஆனது MGMD இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.