கால்நடைத் துறையை மேம்படுத்துவதற்காக கூடுதல் செயல்பாடுகளை உள்ளடக்கிய தேசியக் கால்நடைத் திட்டத்தில் (NLM) மேலும் புதிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO), சுய உதவிக் குழுக்கள் (SHG), கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLG), உழவர் கூட்டுறவு அமைப்புகள் (FCOs) மற்றும் 8 வது பிரிவில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் ஆகியவை குதிரைகள், கழுதைகள், கோவேறுக் கழுதைகள் மற்றும் ஒட்டகங்கள் தொடர்பான பல தொழில்முனைவு முயற்சிகளை நிறுவுவதற்காக தற்போது 50 லட்சம் ரூபாய் வரையில் 50% மூலதன மானியத்தினைப் பெறும்.
குதிரை, கழுதை மற்றும் ஒட்டக இனங்களின் வளங்காப்பிற்காக மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
குதிரைகள், கழுதைகள் மற்றும் ஒட்டகங்களுக்கான பிரத்தியேக விந்து சேமிப்பு நிலையங்கள் மற்றும் உட்கரு பெருக்கப் பண்ணைகள் அமைப்பதற்காக மத்திய அரசானது 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்க உள்ளது.
தனியார் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், FPO, FCO, JLG, உழவர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தீவன விதைகளைப் பதப்படுத்தும் உள் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள 8வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் 50% அளவு மூலதன மானியத்தைப் பெறும்.
விவசாயிகளுக்கான காப்பீட்டில் பயனாளியின் பங்கை 15% என்ற அளவாக குறைத்து, கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய விகிதங்கள் 20%, 30%, 40% மற்றும் 50% ஆகும்.
மீதமுள்ள காப்பீட்டுத் தொகையானது அனைத்து மாநிலங்களுக்கும் 60:40 என்ற விகிதத்திலும், ஒன்றியப் பிரதேசங்களில் 90:10 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ளும்.
மாடு, செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு காப்பீடு பெறுவதற்கு என்று தகுதியாக நிர்ணயிக்கப் பட்ட கால்நடை எண்ணிக்கையானது 10 கால்நடைகளாக உயர்த்தப் பட்டுள்ளது.