ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று தேசியக் குடற்புழு நீக்க தினம் அனுசரிக்கப் படுகிறது.
இது நாடு முழுவதும் உள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்வதற்காக இந்திய அரசு மேற்கொண்ட ஒரு முன்னெடுப்பாகும்.
புழுக்கள் என்பது அவை தனக்கான உணவு மற்றும் அவை உயிர் வாழ்வதற்காக மனித குடலில் வாழ்கின்ற ஒட்டுண்ணிகள் ஆகும்.
இந்தப் புழுக்கள் மனித உடலுக்குத் தேவையான சில ஊட்டச் சத்துக்களை உட் கொண்டு, இரத்த இழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வளர்ச்சித் தடுப்பு ஆகிய குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன.