TNPSC Thervupettagam

தேசியக் குடற்புழு நீக்க நாள் - பிப்ரவரி 10

February 13 , 2024 286 days 230 0
  • தேசியக் குடற்புழு நீக்க தினமானது 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
  • 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் (பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத) குடற்புழு நீக்கம் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் மண் மூலம் பரவும் குடற்புழுக்கள் உட்செல்லக்கூடிய ஆபத்தில் இருக்கும் சுமார் 240 மில்லியன் குழந்தைகளை இது இலக்காகக் கொண்டது.
  • இதற்கான முதல் சுற்று பிப்ரவரி 10 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
  • அதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரண்டாவது சுற்று நடத்தப் படுகிறது.
  • மக்களைத் தாக்கும் மூன்று வகையான புழுக்கள் உருளைப் புழுக்கள் (அஸ்காரிஸ் லம்ப்ரிகாய்டுகள்), சாட்டைப்புழுக்கள் (ட்ரிச்சுரிஸ் டிரிச்சியுரா), மற்றும் கொக்கிப் புழுக்கள் (நெகேட்டர் அமெரிக்கனஸ் மற்றும் அன்சிலோஸ்டோமா டியோடெனலே) ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்