இத்தினமானது, இந்திய நாட்டின் நிர்வாக அமைப்பின் ஒரு முதுகெலும்பாக விளங்கும் அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள குடிமைப் பணியாளர்களின் மகத்தான முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.
இந்தத் தேசிய அளவிலான அனுசரிப்பு ஆனது முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டில் இந்தத் தினத்தில் தான் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் டெல்லியில் உள்ள மெட்கால்ஃப் ஹவுஸில் தகுதிகாண் நிர்வாக அதிகாரிகளுடன் உரையாற்றினார்.
அவர் குடிமைப் பணியாளர்களை "இந்தியாவின் எஃகு சட்டகம்" என்று குறிப்பிட்டார்.
கார்ன்வாலிஸ் பிரபு ‘இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை’ என்று அழைக்கப் படுகிறார்.
1793 ஆம் ஆண்டு சாசனச் சட்டம் ஆனது பிரித்தானியர்கள் ஆதிக்கம் வகித்த குடிமைப் பணிகளை நிறுவியது.
வெல்லஸ்லி பிரபு, குடிமைப் பணி ஆட்சேர்ப்புப் பணிகளுக்காக இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக 1800 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் வில்லியம் கோட்டை கல்லூரியை நிறுவினார்.
1853 ஆம் ஆண்டு சாசனச் சட்டம் ஆனது, அரசுப் பணிகளில் நிலவி வந்த அரசியல் கட்சிப் பின்னணி சார்பான நியமன அமைப்பு முறையை நீக்கி, அனைவருக்குமானப் போட்டித் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது.
குடிமைப் பணிகள் ஆணையமானது 1854 ஆம் ஆண்டில் இலண்டனில் நிறுவப்பட்டது.
மெக்காலே பிரபுவின் 1856 ஆம் ஆண்டு அறிக்கையானது தகுதி அடிப்படையிலான குடிமைப் பணியினை அறிமுகப்படுத்தியது.
1922 ஆம் ஆண்டு முதல், ICS தேர்வுகள் இந்தியாவில் முதன்முதலாக அலகாபாத்தில் நடத்தப்படத் தொடங்கின.
1926 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று அரசுப் பணியாளர் ஆணையம் இந்தியாவில் நிறுவப்பட்டது.