ஏப்ரல் 21 அன்று இந்தியா முழுவதும் குடிமைப் பணிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டில் முதலாவது குடிமைப் பணிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நாளில் குடிமைப் பணியாளர்கள் பொது மக்களின் தேவைகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். இவர்கள் பொதுச் சேவைகளுக்கு தங்களுடைய பொறுப்புகளை இந்த நாளில் புதுப்பித்துக் கொள்கின்றனர்.
இந்த நாளானது 1947 ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள மெட்கேப் இல்லத்தில் முதலாவது பிரிவைச் சேர்ந்த குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளிடையே சர்தார் வல்லபாய் படேல் உரையாற்றிய நாளுடன் ஒன்றிப் பொருந்துகின்றது.
அவருடைய புகழ்பெற்ற உரையில் குடிமைப் பணியாளர்களை “இந்தியாவின் எஃகுச் சட்டகம்” என்று குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தல் காரணமாக குடிமைப் பணிகள் தினமானது இந்த ஆண்டு அனுசரிக்கப்படவில்லை.