TNPSC Thervupettagam

தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் கடன் வழங்கீட்டு திட்டம் – தமிழ்நாடு

August 12 , 2024 103 days 174 0
  • தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) கடன் வழங்கீட்டுத் திட்டத்தில் தமிழக அரசானது வெளிப்படையான ஆர்வமின்மையை வெளிப்படுத்தியுள்ளது.
  • இது நலிவுற்றப் பிரிவினருக்கான உதவித் திட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்கான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.
  • 2019-20 ஆம் ஆண்டு முதல், மாநில அரசானது 106.15 கோடி ரூபாய் மதிப்பு வரையில் கடன் பெற்றுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டு முதல், கடந்த இரண்டு ஆண்டுகளில் 5.78 கோடி ரூபாய் நிதி உதவியினைப் பெற்றாலும், NCDC கழகத்திடமிருந்து எந்தக் கடனையும் பெறுவதை இந்த மாநில அரசு நிறுத்தியது.
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது 27,260.03 கோடி ரூபாயும், தெலுங்கானா அரசு 38,252.79 கோடி ரூபாயும் கடன் பெற்றுள்ளன.
  • நலிவுற்றப் பிரிவினருக்கான திட்டங்களுக்காக வேண்டி மாநில அரசுகள் மூலம் விண்ணப்பித்தால் அதற்கான கடனுக்கான வட்டி விகிதம் 11.5% ஆக இருக்கும்.
  • நேரடி நிதியுதவிச் சூழலில், வட்டி விகிதங்கள் 11.8% (1 கோடி ரூபாய் வரையிலான செலவினம் கொண்ட திட்டங்கள்) மற்றும் 11.92% (1 கோடி ரூபாய்க்கு மேலான செலவினம் கொண்ட திட்டங்கள்) ஆகும்.
  • NCDC கழகத்தின் வட்டி விகிதங்கள் "பல நிபந்தனைகளுடன்" கூடியதாக உள்ளதோடு, "மிக அதிகமாகவும்" உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்