ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை இந்தியா முழுவதும் தேசியக் கூட்டுறவு வாரம் கொண்டாடப் படுகின்றது.
இந்த ஆண்டில் 66வது தேசியக் கூட்டுறவு வாரம் கொண்டாடப் படுகின்றது.
நாட்டின் பொருளாதாரத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் பங்களிப்பை எடுத்துக் காட்டுவதே இந்த வார அனுசரிப்பின் நோக்கமாகும்.
இந்தக் கொண்டாட்டங்கள் ஆனது இந்தியக் கூட்டுறவு இயக்கத்தின் தலைமை அமைப்பான இந்திய தேசியக் கூட்டுறவு ஒன்றியத்தினால் (National Cooperative Union of India - NCUI) ஏற்பாடு செய்யப் படுகின்றது.
2019 ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கான முக்கியக் கருப்பொருள், “இந்தியாவில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு” என்பதாகும். இது கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் இந்தியாவில் உள்ள கூட்டுறவு அமைப்புகள் எவ்வாறு உதவ முடியும் என்பதின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.