நாட்டில் கூட்டுறவு அமைப்புகளின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தேசியக் கூட்டுறவுத் தரவுத்தளம் ஆனது தொடங்கப் பட்டுள்ளது.
இது தேசிய/மாநில கூட்டமைப்புகள் உட்பட அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களின் தரவுகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஓர் இணைய அடிப்படையிலான எண்ணிம கட்டுப்பாட்டகம் ஆகும்.
இது 30 கோடிக்கும் அதிகமான மக்கள் இணைந்துள்ள 8 லட்சம் கூட்டுறவு அமைப்புகளைப் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது.
'தேசியக் கூட்டுறவுத் தரவுத் தளம் 2023: ஓர் அறிக்கை' என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.